கூட்டு ஒப்பந்தம் வேண்டாம் 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வேண்டும்! -
ஹட்டன் கொட்டக்கலை தோட்ட தொழிலாளர்கள் கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவினை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும் 200 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மேற்படி நகரில், “கூட்டு ஒப்பந்தம் வேண்டாம்”, “கூட்டு ஒப்பந்தத்தினை ரத்து செய்” போன்ற பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாம் மாதாந்தம் தொழிற்சங்கங்களுக்கு வழங்கும் சந்தாப்பணத்தை தற்காலிகமாக நிறுத்தி விடுவோம் என கோஷங்கள் மூலம் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினர்.
அத்தோடு, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஷ் தொழிலாளர்களை ஏமாற்றி விட்டதாகவும், அடுத்து வரும் தேர்தல் காலங்களில் வாக்குகளை கேட்டு வரக்கூடாது என இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டு ஒப்பந்தம் வேண்டாம் 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வேண்டும்! -
Reviewed by Author
on
February 04, 2019
Rating:

No comments:
Post a Comment