பிரான்சில் 10 பேரை பலிகொண்ட பயங்கர தீ விபத்து!
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் Erlanger வீதியின் 16-ஆம் வட்டாரத்தில் இருக்கும் எட்டு மாடி அடுக்கு குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் காரணமாக 10 பேர் பரிதாபமாக பலியாகினர். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இறந்தவர்கள் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், 10 பேரில் ஒரு பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
40 வயது மதிக்கத்தக்க Radia Benaziez தீ விபத்து ஏற்பட்ட போது கட்டிடத்தின் எட்டாவது மாடியில் இருந்ததாக கூறப்படுகிறது.

அல்ஜீரியாவைச் சேர்ந்த இவர் கட்டிட வடிவமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் அவரின் புகைப்படம் இப்போது வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்திற்கு முக்கிய காரணம் பெண் ஒருவர் தான் என்று கூறப்பட்டு பொலிசார் அவரை கைது செய்த நிலையில், முதல் கட்ட விசாரணையில், சம்பவ தினத்தன்று அவர் மது அருந்தியதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி இன்னும் சில பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதைப் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் 10 பேரை பலிகொண்ட பயங்கர தீ விபத்து!
Reviewed by Author
on
February 07, 2019
Rating:
No comments:
Post a Comment