வரலாற்றுச் சிறப்புமிக்க 2வது சந்திப்பு: வியட்நாமுக்கு ரயிலில் புறப்பட்ட கிம் ஜாங் உன் -
35 வயதான கிம் ஜாங் உன், குண்டு துளைக்காத பச்சை மற்றும் மஞ்சள் வண்ண ரயிலில் சீனாவின் எல்லை நகரில் சென்று சேர்ந்துள்ளார்.
அங்கிருந்து அவர் ஆயிரக்கணக்கில் மைல்கள் தொலைவில் இருக்கும் வியட்நாம் நாட்டுக்கு பயணமாவார்.
கிம் ஜாங் உன் அவரது விருப்ப வாகனமான ரயிலில் பயணமாவதால் வியட்நாம் செல்ல 2 நாட்கள் ஆகலாம் என கருதப்படுகிறது.
மணிக்கு 37 மீற்றர் பயணமாகும் இந்த ரயிலில் ஜனாதிபதி கிம் ஜாங் உன்-கு தேவையான அனைத்து உணவுகளும் சேமிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் மேற்கொண்ட சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் இந்த சந்திப்பில் இருவரும் விவாதிக்கலாம் என கூறப்படுகிறது.
எதிர்வரும் புதன் அல்லது வியாழனன்று முடிவு செய்யப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சந்திப்பு தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்கெனவே தகவல் வெளியிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்த இன்னும் உழைக்க வேண்டும் என கூறியுள்ள டிரம்ப், ஆனால் கிம் ஜாங் உடனான நட்பு சிறப்பாக உள்ளது என்றார்.
இரு தலைவர்களுக்குமான முதல் சந்திப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூர் நாட்டில் வைத்து நடத்தப்பட்டது.
மொத்த உலக நாடுகளும் உற்றுநோக்கிய இந்த சந்திப்புக்கு பின்னர், அணு ஆயுதங்கள் தொடர்பில் கிம் ஜாங் உன் முக்கிய பல முடிவுகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுச் சிறப்புமிக்க 2வது சந்திப்பு: வியட்நாமுக்கு ரயிலில் புறப்பட்ட கிம் ஜாங் உன் -
Reviewed by Author
on
February 24, 2019
Rating:
Reviewed by Author
on
February 24, 2019
Rating:


No comments:
Post a Comment