உலகம் நிர்வாணமாக சுற்றும் இளம்பெண்: அதிர்ச்சி காரணம் -
காதலை பெரிதாக கொண்டாடியவர் அவுஸ்திரேலியரான ரேச்சல் ஃபிட்ஸ்பாட்ரிக். அதனாலையே தமது கனவுக்கு நிகரான நபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
அவருடனே தமது வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்க வேண்டும் எனவும், நரை கூடி தள்ளாடும் வயது வரை அவருடனே வாழ வேண்டும் எனவும் ரேச்சல் கனவு கண்டார்.
ஆனால் அந்த கனவு பாதியில் கலைந்தது. 2016 ஆம் ஆண்டு ரேச்சலிடம் இருந்து அந்த நபர் விவாகரத்து பெற்றுக் கொண்டார்.
இதில் துவண்டுவிடாத ரேச்சல், வாழ்க்கையை இனிமேல் தான் வாழ வேண்டும் என முடிவு செய்தார்.
அதற்கென ஒரு ஆண்டு முழுவதும் தமக்கு பிடித்தமுறையில் வாழ முடிவு செய்து அதற்கு Yes Year என பெயர் சூட்டினார்.
இதனையடுத்து 28 வயதான ரேச்சல் முதன் முறையாக Spartan Race எனப்படும் வினோத ஓட்டப் பந்தையத்தில் கலந்து கொண்டார்.
அங்கே பெண்கள் குழு ஒன்றிற்கு அறிமுகமான ரேச்சல், அவர்களின் விசித்திர திட்டம் கேட்டு முதலில் பயந்துள்ளார்.
அது, குறிப்பிட்ட தொலைவு வரை நிர்வாணமாக நடக்க வேண்டும் என்பதே. முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த ரேச்சல் இது Yes Year என தாம் முடிவு செய்துள்ளதால் அந்த குழுவினருடன் நிர்வாணமாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
ரேச்சலுக்கு அந்த நிகழ்வு புதிய தொடக்கத்தை அளித்துள்ளது. அன்று முதல் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் ரேச்சல் வாய்ப்பு அமையும்போதெல்லாம் நிர்வாணமாக நடமாடத் துவங்கியுள்ளார்.
இதை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு நாடுகளில் தாம் பதிவு செய்த நிர்வாண புகைப்படங்களாக பதிவு செய்துள்ளார் ரேச்சல்.
உலகம் நிர்வாணமாக சுற்றும் இளம்பெண்: அதிர்ச்சி காரணம் -
Reviewed by Author
on
February 18, 2019
Rating:

No comments:
Post a Comment