ஐசிசி டெஸ்ட் தரவரிசை: சாதித்துக் காட்டிய குசால் பெரேரா -
இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
தென் ஆப்ரிக்கா அணியுடன் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி சாதனை வெற்றியைப் பதிவு செய்த நிலையில்,
டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.
டர்பன் டெஸ்டின் 2வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்கள் விளாசி இலங்கை அணியின் வெற்றிக்கு உதவிய குசால் பெரேரா, ஒரேயடியாக 58 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 40வது இடம் பெற்றுள்ளார்.
இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி முதலிடத்தையும், செதேஷ்வர் புஜாரா 3வது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 878 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து, 862), தென் ஆப்ரிக்காவின் காகிசோ ரபாடா (849), வெர்னான் பிலேண்டர் (821) அடுத்த இடங்களில் உள்ளனர்.
இந்திய சகல துறை வீரர் ரவீந்திர ஜடேஜா (794) 5வது இடத்தில் நீடிக்கிறார். அஷ்வின் ஒரு இடம் பின்தங்கி 10வது இடத்தில் உள்ளார்.
ஜஸ்பிரித் பூம்ரா 16வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா 116 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
தென் ஆப்ரிக்கா (110), நியூசிலாந்து (107) அடுத்த இடங்களில் உள்ளன. டெஸ்ட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் (439) முன்னிலை வகிக்கிறார்.
வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் (415), இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (367) அடுத்த இடங்களில் உள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: சாதித்துக் காட்டிய குசால் பெரேரா -
Reviewed by Author
on
February 18, 2019
Rating:

No comments:
Post a Comment