கனடாவில் கொடூரமான கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் - வெளியான அதிர்ச்சித் தகவல்கள் -
கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தொடர் கொலையாளி புறூஸ் மக்காத்தர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரொறன்றோவில் இரண்டு இலங்கைத் தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்ததாக புறூஸ் மக்காதர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இவருக்கான தண்டனையை முடிவு செய்யும் நீதிமன்ற அமர்வின் இரண்டாம் நாள் அமர்வு நேற்று நடைபெற்றது.
இதன்போது மக்காத்தருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையுடன் 50 ஆண்டுகள் பிணை கோரி விண்ணப்பிக்க முடியாத தீர்ப்பு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பினை அறிவிக்கும் வழக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மிகவும் கொடூரமான முறையில் மக்காத்தர் இந்த படுகொலைகளைச் செய்துள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொடூரமான முறையில் நபர்களை படுகொலை செய்துள்ளார். பின்னர் அவர்களை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்ததாகவும் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த ஸ்கந்தராஜ் நவரட்னம், கிருஸ்ணா கனகரட்ணம் ஆகியோரும் இந்த கொலையாளி மூலம் கொடூரமான கொலை செய்யப்பட்டிருந்தனர்.
புறூஸ் மக்காத்தரின் படுகொலைகள், இலங்கையில் நடந்த இனப்படுகொலையை நினைவுபடுத்துவதாக கொலை செய்யப்பட்ட தமிழர் ஒருவரின் நண்பர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் கொடூரமான கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் - வெளியான அதிர்ச்சித் தகவல்கள் -
Reviewed by Author
on
February 07, 2019
Rating:

No comments:
Post a Comment