இது மட்டும் நடந்திருந்தால் தமிழர்கள் எக்காரணம் கொண்டும் ஆயுதமேந்தியிருக்க மாட்டார்கள்!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணங்கியிருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தல் நடத்திருக்கும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அரசியல் அமைப்பில் தமிழரின் உரிமைகள் வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் எக்காரணம் கொண்டும் ஆயுதமேந்தியிருக்க மாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“சகல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் அமைப்பினை உருவாக்கி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி தயாராகவே உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பழைய முறைமையில் தேர்தலை நடத்த இணக்கம் தெரிவித்திருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே மாகாணசபை தேர்தலை நடத்தியிருக்க முடியும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இது மட்டும் நடந்திருந்தால் தமிழர்கள் எக்காரணம் கொண்டும் ஆயுதமேந்தியிருக்க மாட்டார்கள்!
Reviewed by Author
on
February 14, 2019
Rating:

No comments:
Post a Comment