மன்னாரைச் சேர்ந்த வைத்தியகலாநிதி மரியாம்பிள்ளை மதுரநாயகம் கால்பந்தாட்ட சம்மேளத்தின் மருத்துவ மாநாட்டில் கலந்துகொள்ள தெரிவு
ஆசிய கால்பந்தாட்ட சம்மேளத்தின் ஆறாவது மருத்துவப் பிரிவுக்கான மாநாடுஎதிர்வரும் 3ந் திகதி தொடக்கம் 9ந் திகதி வரை சீனாவில் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தின் சார்பாக இருவர் தெரிவு
செய்யப்பட்டு இவ் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இவ் மாநாட்டின்போது உலக உதைபந்தாட்ட சம்மேளத்தினால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் பாவிக்கும் ஊக்க மருந்து பாவனை சம்பந்தப்பட்ட பாடநெறியும் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் மாநாட்டில் இலங்கை சார்பாக கலந்து கொள்ள இருக்கும் இருவரில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவருமான வைத்தியகலாநிதி மரியாம்பிள்ளை மதுரநாயகம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் மன்னார் மாவட்டத்தின் மடு, மாந்தை உதைப்பந்தாட்ட சம்மேளத்தின்
தலைவருமாவார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மன்னாரைச் சேர்ந்த வைத்தியகலாநிதி மரியாம்பிள்ளை மதுரநாயகம் கால்பந்தாட்ட சம்மேளத்தின் மருத்துவ மாநாட்டில் கலந்துகொள்ள தெரிவு
Reviewed by Author
on
February 28, 2019
Rating:

No comments:
Post a Comment