அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட ஆயுள்வேத வைத்திய சாலையில் சுகாதார சீர்கேடு-நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம்

மன்னார் நறுவிலிக்குளத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்டத்திற்குரிய ஆயுள்வேத வைத்தியசாலை கடந்த 2015ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இந்த வைத்தியசாலையில் ஐந்து வைத்தியர்கள் பதிநான்கு ஊழியர்கள் கடமையாற்றுகின்றார்கள்
அப்படி இருந்தும் மிகவும் அசுத்தமாக காணப்படுகிறது ஒரு புறம் நோயாளருக்கு மருந்து கொடுக்கப்படுகிறது மறுபுறம் மருத்துவனை வளாகத்தினுள் ஆடு மாடுகள் மேய்ப்பும் நடைபெறுகிறது இங்கு சென்று  சென்று வந்தால் நிச்சயம் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் மக்கள் கூறுகிறார்கள்

இதுபற்றி அவர்கள் மேலும் தெரிவிக்கையில்
வேலிகள் அமைக்கப்படவில்லை வளாகத்தினுள் கருவேல முள்ளுமரங்களும் பற்றைக்காடுகளும் வளர்ந்து கிடக்கிறது  மருத்துவமனைக்கு உள்நுழையும் வாசலில் மருந்து போத்தல்கள் நீண்ட காலமாக குவிக்கப்பட்டுள்ளது இது ஒன்றே  நோய் தொற்று ஏற்பட போதுமானது என்று கூறுகிறார்கள் வைத்தியசாலை சென்று வந்த மக்கள்
இங்கே போதுமான ஊழியர்கள் இருக்கின்றார்கள்.

 ஆனால் கூட்டமாக நோயாளர்கள் வருவதில்லை மருத்துவமனை திறப்புவிழா செய்த ஆரம்பத்தில் வளாகம் துப்பரவு செய்யப்பட்டு சிலசில மூலிகை செடிகள் வளர்க்கப்பட்ட்து ஆனால் இப்பொழுது அவை ஒன்றும் இல்லை சகல வசதிகள் இருந்தும் பல வருடங்களாக பராமரிக்கப்படாத கட்டிடங்கள் போல ஒரு மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை இருப்பது மிக வேதனையான விடயம் என்று மக்கள் கவலை தெரிவிப்பதுடன் சம்பந்த பட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் .







மன்னார் மாவட்ட ஆயுள்வேத வைத்திய சாலையில் சுகாதார சீர்கேடு-நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் Reviewed by Author on February 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.