தேசிய விருது பெற்ற மன்னார் ஊடகவியலாளர்-யேசுதாஸ் பெனிற்லஸ்-படங்கள்
2019ஆம் ஆண்டுக்கான அதியுயர் வானொலி அரச விருது வழங்கல் நிகழ்வில் தமிழ்மொழி மூலம் சிறந்த ஆராய்ச்சி பூர்வ செய்தியினை வழங்கிய ஊடகவியலாளர் விருதினை மன்னார் மண்ணின் மைந்தன் யேசுதாஸ் பெனிற்லஸ் பெற்றுள்ளார்.
இலங்கையில் உள்ள வானொலிகளின் செயற்திறனை ஊக்குவிக்கும் வகையில் இரண்டாவது வருடமாகவும் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளை வழங்கும் நிகழ்வு கொழும்பு தாமரைத் தடாகம் கலையரங்கில் 2019-02-12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த ஆண்டில் வெளிப்படுத்தப்பட்ட திறமைகளின் அடிப்படையில் பல விருதுகள் இதன்போது வழங்கி சிறப்பிக்கப்பட்டன.
அந்தவகையில் வர்ணம் வானொலி சார்பில் தமிழ் மொழிமூலம் சிறந்த ஆராய்ச்சி செய்தியினை வழங்கியமைக்காக குறித்த விருதினை மன்னார் மண்ணின் மைந்தன் ஜேசுதாஸ் பெனிற்லஸ் பெற்று எமது மன்னார் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மன்னாரின் தலைமன்னார் கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட திரு திருமதி திரு திருமதி யேசுதாஸ் பவுலீஸ் யேசுதாஸ் சாந்தி தம்பதிகளின் புதல்வனும் 1-11 வரை புனித லோறன்சியார் RCTM பாடசாலை மற்றும் A/L தலைமன்னார் பியர் அ.த.க. பாடசாலையின் பழைய மாணவனுமாகிய யேசுதாஸ் பெனிற்லஸ், கடந்த ஆறு ஆண்டுகளாக ஊடக துறையில் பணியாற்றி வருகின்றார்.
இலங்கை வானொலி வரலாற்றில் அதியுயர் வானொலி அரச விருது வழங்கல் நிகழ்வு கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகின்றது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் அதியுயர் வானொலி அரச விருது வழங்கல் நிகழ்வில் செய்திப்பிரிவிற்காக வழங்கப்பட்ட இரண்டு அதியுயர் விருதுகளையும் அவர் இதற்கு முன்னர் சுவீகரித்திருந்தார்.
இதன்போது சிறந்த வானொலி செய்தி ஆசிரியர் மற்றும் சிறந்த ஆராய்ச்சி பூர்வ செய்தியினை வழங்கிய ஊடகவியலாளர் ஆகிய இரண்டு விருதுகளையே அவர் தன்வசப்படுத்தியிருந்தார்.
எங்கிருந்தாலும் மன்னார் மண்ணின் பெருமையைபறைசாற்றுகின்ற எமது மண்ணின் மைந்தர்களுக்கு முதல் மரியாதை வழங்கும் நியூமன்னார் இணையமானது ஊடகத்துறையில் மூன்று விருதுகளைப்பெற்றுள்ள ஊடகவியலாளர் யேசுதாஸ் பெனிற்லஸ்அவர்களையும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.
-வை.கஜேந்திரன்-
தேசிய விருது பெற்ற மன்னார் ஊடகவியலாளர்-யேசுதாஸ் பெனிற்லஸ்-படங்கள்
 
        Reviewed by Author
        on 
        
February 15, 2019
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
February 15, 2019
 
        Rating: 




No comments:
Post a Comment