வரலாற்று வெற்றிக்கு பின் நாடு திரும்பிய இலங்கை அணிக்கு உற்சாக வரவேற்பு!
இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையைப் படைத்தது.
இலங்கை அணியின் இந்த வெற்றிக்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இலங்கைக்கு திரும்பிய டெஸ்ட் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அணித்தலைவர் திமுத் கருணரத்னே மற்றும் அணி வீரர்களை வரவேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மாலை அணிவித்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
வரலாற்று வெற்றிக்கு பின் நாடு திரும்பிய இலங்கை அணிக்கு உற்சாக வரவேற்பு!
Reviewed by Author
on
February 26, 2019
Rating:

No comments:
Post a Comment