அண்மைய செய்திகள்

recent
-

பெண்களை தாக்கும் சினைப்பைக் கட்டிகளை சரி செய்ய வேண்டுமா? -


15 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் சந்திக்கும் பிரச்சினை தான் சினைப்பை கட்டிகள்.

குறிப்பாக இது சமநிலையற்ற ஹார்மோன் சுரப்புகள் காரணமாக உடல் எடை அதிகரிக்கும். அதனால் உடல் பருமனான பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கொப்பளங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உணவுப் பழக்கவழக்கம், சிறுவயது முதலே தரப்படும் அதிகமான ஊட்டச்சத்து, துரித உணவுகள், வாழ்வியல் மாற்றங்கள், வேலைப்பளு, மன அழுத்தம், பரம்பரை நோய், மரபணு குறைபாடு இவைகளே சினைப்பை பிரச்சினை வர காரணமாக உள்ளது.
இதனை தடுக்க வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • தினமும் ஆளிவிதையை ஒரு கப் நீரில் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை வடிக்கட்டி குடிக்க வேண்டும். ஊறிய ஆளி விதையை நீங்கள் சாலட் அல்லது சுண்டால் போல் செய்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
  • முதல் நாள் இரவில் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து மறு நாள் அதனுடன் தேன் கலந்து வெந்தயத்துடன் அப்படியே சாப்பிட வேண்டும். நீர் குடித்து , வெந்தயத்தை மென்று சாப்பிட்டு விடுங்கள்.
  • நீரை நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் சிறிது பட்டைப் பொடியை கலந்து ஆற விடுங்கள். வெதுவெதுப்பாக ஆனவுடன் அந்த நீரை குடிக்க வேண்டும். இந்த வைத்தியம், சீரற்ற மாதவிலக்கை சரிப்படுத்துகிறது.
  • அதிமதுரத்தை நீரில் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். பின்னர் வடிகட்டி அந்த நீரை குடிக்க வேண்டும். அல்லது அதிமதுரப் பொடி கடைகளில் கிடைத்தால் அதனை 1 ஸ்பூன் பயன்படுத்தி சுடு நீரில் கலந்து வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும்.
  • புதினா இலைகளை நீரில் கலந்து 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீர வடிகட்டி குடிக்க வேண்டும். தினமும் 2, 3 தடவை இப்படி குடிப்பது அவசியம்.
பெண்களை தாக்கும் சினைப்பைக் கட்டிகளை சரி செய்ய வேண்டுமா? - Reviewed by Author on February 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.