தலைமன்னார் மன்னார் வீதியில் வாகன விபத்தில் 05பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி
மன்னார் தலைமன்னார் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர்
காயங்களுக்குள்ளாகி மன்னார் பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் சம்பவம் இன்று செவ்வாய் கிழமை (05.03.2019) நண்பகல் 12.45 மணியளவில்
மன்னார் தலைமன்னார் வீதியில் ஐந்தாம் கட்டை நாற்சந்தியில்
இடம்பெற்றுள்ளது.
இவ் சம்பவம்பற்றி ஆரம்ப விசாரனையில் தெரியவருவதாவது தென்பகுதி
பன்னம்பிட்டியைச் சேர்ந்த வாகனம் ஒன்று ஆறு பேருடன் தலைமன்னார்
பகுதியிலிருந்து மன்னார் நோக்கி சென்றபொழுது மன்னார் எருக்கலம்பிட்டி
ஐந்தாம் கட்டை நாற்சந்தியில் தோட்டவெளியிலிருந்து கணவனும் மனைவியும் முச்சக்கர வண்டியொன்றில் விறகு ஏற்றிக் கொண்டு எருக்கலம்பிட்டி நோக்கிச் செல்வதற்கு வீதியை கடக்க முற்பட்டபோது பிரதான வீதியில் இவ்விரு வாகனங்களும் மோதுண்டன.
இதனால் முச்சக்கர வண்டி பலத்த சேதத்துக்கு உள்ளாகியதுடன் இதில் பயணித்த எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த அன்சீப் (வயது 31) பஸ்மியா (வயது 25)
ஆகியோரும் ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்களில் சமரசிங்க (வயது 35) சம்பத் (வயது 39) சிறியா (வயது 56) ஆகியோரும் காயங்களுக்கு உள்ளாகி மன்னார் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து சம்பந்தமாக மன்னார் பொலிசார் விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.

Reviewed by Author
on
March 05, 2019
Rating:

No comments:
Post a Comment