மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசை அறிக்கை உண்மைக்கு புறம்பானது - திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச்சபை
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் பொருத்தப்பட்ட வளைவை கத்தோலிக்க மக்கள் பிடுங்கியெறிந்தது தொடர்பான சர்ச்சை நீடிக்கிறது. இந்த சர்ச்சை தொடர்பாக, மன்னார் குரு முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
ஆலய திருப்பணி சபை செயலாளர் கையொப்பமிட்டு இன்று வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்-
திருக்கேதீஸ்வர ஆலயம் 1903 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொழுது இவ்வாலயத்திற்கு செல்வதற்கு அமைக்கப்பட்டதுதான் திருக்கேதீஸ்வர ஆலய வீதி ஆகும். இவ்வீதியில் இரும்பு குழாய்களிலான ஒரு வளைவு கடந்த பல வருடங்களாக இருந்து வந்தது. நீண்ட காலம் சென்றதால் குழாய்களில் திருத்தம் செய்து பொருத்தப்பட்டது. இதனை அவ்விடத்தில் குழுமிய கத்தோலிக்க மக்கள் பிடுங்கியெறிந்ததுடன், நந்தி கொடிகளையும் காலால் மிதித்துதனர். இச் சம்பவங்கள் நடந்தபோது, கத்தோலிக்க குருவானவர் ஒருவரும் உடனிருந்தார்.
திருக்கேதீஸ்வர ஆலய முகப்பில்தான் வளைவு அமைகக்ப்பட்டதே தவிர, லூர்து மாதா ஆலயம் முன்பாக அல்ல.
லூர்து மாதா ஆலயம் அமைப்பதற்கு கோரப்பட்ட காணி விக்கு நீதித்துறை ஊடாக 21.11.2016 ஒரு ஒப்பந்தத்துடன் முடிவடைந்து விட்டது. அந்த வழக்குக்கும் வளைவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அத்துடன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிராக வழக்கு போடப்படவும் இல்லை. காணிகள் தொடர்பாக அரசு எடுத்த சட்ட நடவடிக்கை தவறானது என்பதற்காகவே போடப்பட்டது.
மேற்படி சம்பவம் தொடர்பாக 02.03.2019 சனிக்கிழமை திரு ஜே.சி.இராமகிருஷ்ணன், மற்றும் திரு ஆ.ஐ.தயானந்தராஜா ஆகியோருடன் உரையாடல் இடம்பெற்றது. எனினும் அதில் இணக்கப்பாடுகள் தொடர்பாக கருத்து பரிமாறப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசை அறிக்கை உண்மைக்கு புறம்பானது - திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச்சபை
Reviewed by NEWMANNAR
on
March 06, 2019
Rating:

No comments:
Post a Comment