ஆசிய ரோல் போல் போட்டியில் வெற்றிவாகை மன்னார் வீராங்கனைகளுக்கு மகத்தான வரவேற்பு-படங்கள்
மூன்றாவது ஆசிய ரோல் போல் போட்டியில் இலங்கை அணியில் பங்குபற்றி
வெற்றிவாகையுடன் நாடு திரும்பிய மன்னார் வீராங்கனைகள் மற்றும்
வீரர்களுக்கு மன்னாரில் மாபெரும் வரவேற்பு.
3வது ஆசிய ரோல் போல் (உருள் பந்து) வெற்றிக் கிண்ணப் போட்டி
இந்தியாவில் கடந்த 21.02.2019 தொடக்கம் 24.02.2019 வரை நடைபெற்றபொழுது
இலங்கை உட்பட பத்து நாடுகள் இவ் போட்டியில் கலந்து கொண்டன.
இவ் போட்டியில் பெண்கள் அணியானது மூன்றாவது இடத்தையும் ஆண்கள் அணி நான்காவது இடத்தையும் தட்டிக்கொண்டது.
நடைபெற்ற போட்டிகளில் இலங்கை அணி சார்பாக மன்னார் மாவட்டத்திலிருந்து பெண்கள் அணியில் மூன்று வீராங்கனைகளும் ஆண்கள் அணியில் நான்கு வீரர்களும் பங்குபற்றியிருந்தனர்.
-இவர்கள் நாடு திரும்பியதும் மன்னார் மாவட்ட வீராங்கனைகள் மற்றும்
வீரர்களுக்கு மன்னார் மாவட்ட விளையாட்டு கழகங்கள் மற்றும் அரசியல்
தலைவர்கள் பொது மக்கள் என பலரும் ஒன்றினைந்து செவ்வாய் கிழமை (26)
இவர்களுக்கு மன்னாரில் மகத்தான வரவேற்பு நடாத்தினர்.
இவர்களை மன்னார் தீவின் நுழைவாயிலில் மாலையிட்டு
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகனராஸ்,
இலங்கை ரோல் போல் சம்மேளன செயலாளர் பா.தவேந்திரன்,
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன்,
மன்னார் நகர பிதா அன்ரனி டேவிசன், மன்னார் நகர சபை உறுப்பினர்கள்,
மன்னார் மாவட்ட சொக்கோ மாஸ்ரர் விளையாட்டுக் கழக தலைவர் ஜே.எம்.அன்ரன் பிகிராடோ,
செயலாளர் கே.சிறீகாந்தன் உட்பட பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டு இவர்களை மன்னார் நகர சபை மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்.
இங்கு இடம்பெற்ற நிகழ்வில் மன்னார் மாவட்ட சொக்கோ மாஸ்ரர் விளையாட்டுக் கழகம் வீரர்களுக்கும் இவர்களை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களுக்கும் ஞாபக சின்னங்கள் வழங்கி கௌரவித்தனர். இவ் நிகழ்வில் பலரும் மன்னார் மாவட்ட வீரர்களின் விளையாட்டுத் திறமையை எடுத்துக்கூறி உரைகளும் இடம்பெற்றது.

Reviewed by Author
on
March 02, 2019
Rating:
No comments:
Post a Comment