பெண்கள் தங்களை சரியான முறையில் வழி நடத்திக்கொண்டு செல்லும் போது எதிர்த்து நிற்கும் சக்தியும் உங்களுடன் வரும்- அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்-(படம்)
நீங்கள் உங்களை வளர்த்துக்கொள்ளும் போதே சமூகமும் வளர்ச்சியடையும். பெண்கள் தியாக மனற் பான்மையுடன் கடமையாற்றும் பொழுதும், முன் உதாரணமாக செயற்படும் போதும் குடும்பங்களிலும் சரி,அலுவலகங்களிலும் சரி ஏனையவர்களும் இணைந்து செயற்படுவார்கள் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம் மற்றும் 'சாதனை பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு' இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளயில் மன்னார் நகர சபை மண்டபத்தில், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்,மற்றும் விருந்தினர்களாக முசலி பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்,மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் கே.ஜே.பிறட்லி ஆகியோர் கலந்து கொண்டதோடு,அழைக்கப்பட்ட திணைக்கள பிரதி நிதிகளும் கலந்துகொண்டனர்.
இதன் போது பல்வேறு துறை சார்பாகவும் தெரிவு செய்யப்பட்ட சாதனை பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்ட விருந்தினர்கள் விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர். குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,
பெண்கள் தங்களை சரியான முறையில் வழி நடத்திக்கொண்டு செல்லும் போது எதிர்த்து நிற்கும் சக்தியும் உங்களுடன் வரும்.
ஆண்களுக்கு மட்டுமே உடல் பலம் என்று நினைக்கக்கூடாது.மனோ பலம் கூடியவர்களே உடல் பலம் கூடியவர்கள்.
மனோ பலம் குன்றியவர்கள் அனைவருமே உடல் பலம் குறைந்தவர்கள்.மெல்லிய ஒருவர் பெரியவர் ஒருவடை தாக்கும் சந்தர்ப்பம் உள்ளது.அது அவருடைய துணிவு.
அந்த துணிவு உங்களிடம் வரும் சந்தர்ப்பத்தில் நீங்கள் அனைவரும் சாதிக்க முடியும்.சர்வதேச மகளிர் தினம் என்பது உலகம் முழுவதும் கொண்டாடினாலும் கூட மன்னாரில் இதனை சிறப்பாக கொண்டாடுகின்றோம் என்றால் காரணம் பெண்கள் விழிர்ப்புணர்வு அடைய வேண்டும் என்பதே.
இவ்வாறான நிகழ்வுகளின் ஊடக எந்த பெண்கள் எதன் ஊடாக சாதனைகளை படைத்துள்ளார்கள் என்பதனை அறிந்து கொள்ள முடியும்.
இதன் ஊடாக நீங்களும் எவ்வாறு சாதனை படைக்க முடியும் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.மகளிர் தின நிகழ்வானது மகிழ்ச்சி கரமாக இருக்க வேண்டும். அதனை நாம் வருடா வருடம் கொண்டாட வேண்டும். எல்லோரும் சாதனையாளர்களாக மாறுகின்ற போது அதனை கொண்டாட முடியும்.
முதலாம்,இரண்டாம்,முன்றாம் இடங்களில் வருவது மட்டும் வெற்றி இல்லை.கடைசியாக வருபவரிடமும் வெற்றி உள்ளது.முயற்சியை கைவிடாமல் வேலையை செய்து முடித்தமையும் முயற்சியே .அதுவும் ஒரு வெற்றி .அந்த சாதனை உணர்வ உங்களுக்கும் வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Reviewed by Author
on
March 08, 2019
Rating:
No comments:
Post a Comment