கனடிய மத்திய அரசு வேட்பாளராகக் களமிறங்குகிறார் தமிழர் -
தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பலராலும் அறியப்பட்ட ஒருவரான குயின்ரஸ் துரைசிங்கம், எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நடைபெறவிருக்கும் கனடிய மத்திய அரசுக்கான தேர்தலில் வேட்பாளராகத் தெரிவாகியுள்ளார்.
ஒரு ஊடகவியலாளராக, தன்னார்வத் தொண்டனாக, சமூக சேவையாளனாக, அறிவிப்பாளராக, நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளராக மற்றும் ஒரு எழுத்தாளராக, வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளராக, அரசியல் விமர்சகராக என்று பல்வேறு தளங்களிலும் சமூகத்தோடு இணைந்து பயணித்து வருகின்ற இவர், பல்வேறு சமூக அமைப்புக்களிலும் நிர்வாக உறுப்பினராக நீண்டகாலம் சேவையாற்றி வருகிறார்.
மக்களின் தேவைகளை நன்கு அறிந்த ஒருவராக, தன்னலமின்றி மக்களுக்கு சேவை செய்யும் ஆர்வமும் அக்கறையும் கொண்டவராக இருக்கிறார் என்பதை இவரைத் தெரிவுசெய்ய வந்திருந்த பலரும் கூறினார்கள்.
ஸ்காபரோ கில்வூட் தொகுதியின் கொன்சவ்வேட்டிவ் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலில் வேட்பாளராகத் தெரிவாகியுள்ள குயின்ரஸ் துரைசிங்கம், மக்களுக்கு நிறைந்த சேவையாற்றுவார் என்பதில் ஐயமில்லை என அங்கு வந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கனடிய மத்திய அரசு வேட்பாளராகக் களமிறங்குகிறார் தமிழர் -
Reviewed by Author
on
March 31, 2019
Rating:

No comments:
Post a Comment