மன்னார்-சமூகவலைத்தலங்களில் வீண் கருத்துக்களை பரப்புவதை தவிர்க்கவும்- கத்தோலிக்க மற்றும் இந்து மத தலைவர்கள் கோரிக்கை
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இடம் பெற்ற மத முரண்பாடுகளுக்கு தற்காலிகமாக தீர்வு எட்டப்பட்டு நான்கு நாட்களுக்கு தற்காலிகமாக குறித்த அலங்கார வளைவு அமைக்க மன்னார் நீதவான் நீதி மன்றம் அனுமதி அளித்து தற்போது மீண்டும் அந்த அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு சிவராத்திரி நிகழ்வு ஒழுங்கான முறையில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் சில இந்து மற்றும் கத்தோலிக்க சமயத்தவர்கள் முகநூல்களிலும் ஏனைய சமூகவலைதளங்களிலும் பகிரும் கருத்துக்கள் மற்றும் தேவாலயத்திற்கு முன்பாக பட்டாசு கொழுத்துதல் மத தலைவர்களை இழிவாக வர்ணித்து துண்டு பிரசுரங்களை வெளியிடுதல் மற்றும் பொது வெளியில் கருத்துக்களை வெளியிடும் செயல்களால் மீண்டும் வன்முறை ஏற்படும் வாய்புக்கள் அதிகரிப்பதாக சமூக மட்ட பொது நிலையினர் கருத்து தெரிவிக்கின்றனர்
நேற்று முன் தினம் திருக்கேதீஸ்வரத்தில் இடம் பெற்ற மத முறுகள் நிலையானது ஓரளவு தற்போது தணிக்கப்பட்டாலும் பல்வேறு தர்ப்பினர் மற்றும் போலி முகநூல் பாவனையாளர்களினால் திட்டமிடப்பட வகையில் மதவாத கருத்துக்கள் திணிக்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றது
எவ்வாறான பகிர்வுகள் நீண்டகால சமய நல்லிணக்கத்துக்கு பாரிய ஒரு இடைவெளியை ஏற்படுத்த கூடும் எனவே இவ்வாறான பகிர்வுகளை ஆதரிப்பதும் பதில் பகிர்வுகளை மேற்கொள்வதையும் இரு மதங்களையும் மத தலைவர்களையும் கொச்சைபடுத்தி கருத்துக்களை வெளியிடுவதை தவிர்குமாரு கத்தோலிக்க மற்றும் இந்து மத தலைவர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சில இந்து மற்றும் கத்தோலிக்க சமயத்தவர்கள் முகநூல்களிலும் ஏனைய சமூகவலைதளங்களிலும் பகிரும் கருத்துக்கள் மற்றும் தேவாலயத்திற்கு முன்பாக பட்டாசு கொழுத்துதல் மத தலைவர்களை இழிவாக வர்ணித்து துண்டு பிரசுரங்களை வெளியிடுதல் மற்றும் பொது வெளியில் கருத்துக்களை வெளியிடும் செயல்களால் மீண்டும் வன்முறை ஏற்படும் வாய்புக்கள் அதிகரிப்பதாக சமூக மட்ட பொது நிலையினர் கருத்து தெரிவிக்கின்றனர்
நேற்று முன் தினம் திருக்கேதீஸ்வரத்தில் இடம் பெற்ற மத முறுகள் நிலையானது ஓரளவு தற்போது தணிக்கப்பட்டாலும் பல்வேறு தர்ப்பினர் மற்றும் போலி முகநூல் பாவனையாளர்களினால் திட்டமிடப்பட வகையில் மதவாத கருத்துக்கள் திணிக்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றது
எவ்வாறான பகிர்வுகள் நீண்டகால சமய நல்லிணக்கத்துக்கு பாரிய ஒரு இடைவெளியை ஏற்படுத்த கூடும் எனவே இவ்வாறான பகிர்வுகளை ஆதரிப்பதும் பதில் பகிர்வுகளை மேற்கொள்வதையும் இரு மதங்களையும் மத தலைவர்களையும் கொச்சைபடுத்தி கருத்துக்களை வெளியிடுவதை தவிர்குமாரு கத்தோலிக்க மற்றும் இந்து மத தலைவர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

மன்னார்-சமூகவலைத்தலங்களில் வீண் கருத்துக்களை பரப்புவதை தவிர்க்கவும்- கத்தோலிக்க மற்றும் இந்து மத தலைவர்கள் கோரிக்கை
Reviewed by Author
on
March 05, 2019
Rating:

1 comment:
மதங்களின் பெயரால் மனிதகுலம் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறது!
இந்து மதம் அன்பே சிவம், அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார் என்கிறது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிறார்கள் சித்தர்கள்.
கிறித்து மதம் உன்னைப் போல் உன் அயலானை நேசி எனப் போதிக்கிறது.
அதே போல் பவுத்தம் அஹிம்சையைப் போதிக்கிறது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் பேணல், எல்லா உயிர்களிடத்தும் அன்பு, எவ்வுயிர்க்கு ஆயினும் இரக்கம் என்பது புத்தரின் போதனை ஆகும்.
இஸ்லாம் சகோதரத்துவத்தை (Brotherhood of Islam) தீவிரமாக வற்புறுத்தும் மதம்.
இருந்தும் நடைமுறையில் மதங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக் கொள்கின்றன. மதம் என்ற பெயரில் கு௫தி சிந்தப்பட்டுக்கொன்டேயி௫க்கிறது.
Post a Comment