மன்னாரில் ஆபத்தான கிளைமோர் மீட்பு-படங்கள்
மன்னார் பெரியகடை பள்ளிவாசல் ஒழுங்கை மற்றும் மீன் சந்தை பகுதிக்கு செல்லும் பிரதன பாதை சந்தியில் இருந்து பயங்கர வெடி பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இன்றுகாலை மன்னார் நகர சபை ஊழியர்களினால் துப்பவரவுப்பணிக்காக மன்னார் பெரியகடை பகுதிகள் துப்பவரவு செய்யப்பட்ட போதே மேற்படி 3 கிலோகிராம் அளவுடைய கிளைமோர் குப்பைகளுடன் காணப்பட்டதை அடுத்து குறித்த ஊழியர்கள் குப்பைகளை அகற்றாது பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை அடுத்து குறித்த பகுதியில் குப்பைகளோடு குப்பைகளாக குறித்த கிளைமோர் காணப்படுகின்ற நிலையில் குறித்த கிளைமோர் பாதுகாப்பான முறையில் அகற்றபடவுள்ளது
அதே நேரத்தில் குறித்த பகுதியில் அதிகளவிலான பழைய இரும்புகள் கொள்வனவு செய்யும் கடைகள் காணப்படுகின்றமையினால் பழைய இரும்பு பொருட்களுடன் கலந்து குறித்த கிளைமோரும் வந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. அதே நேரத்தில் குறித்த வெடி பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மன்னாரில் ஆபத்தான கிளைமோர் மீட்பு-படங்கள்
Reviewed by Author
on
March 06, 2019
Rating:

No comments:
Post a Comment