மாந்தை மேற்கில் செல்வம் அடைக்கலநாதன்mp ஊடாகபல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு-
கம்பெரலிய வேளைத்திட்டத்தின் கீழ் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடாக மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நேற்று வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 2.1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சன்னார் கற்பக விநாயகர் ஆலய புனரமைப்பு பணிகள், ஈச்சலவக்கை மீனாட்சி அம்மன் ஆலயம், பெரியமடு கிறிஸ்து அரசர் ஆலயம், விடத்தல் தீவு அடைக்கல மாதா ஆலையம் போன்றவற்றின் புனரமைப்பு பணிகள் இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் இணைப்பாளர் ப.மதன்,மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர்,தொழில்நுற்ப உத்தியோகஸ்தர் மற்றும் மாந்தை மேற்கு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்,ஆலய நிர்வாகத்தினர் என பலர் கலந்துகொண்டு குறித்த வேலைத்திட்டங்களை வைபவ ரீதியாக ஆரம்பித் வைத்தனர்.
சுமார் 2.1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சன்னார் கற்பக விநாயகர் ஆலய புனரமைப்பு பணிகள், ஈச்சலவக்கை மீனாட்சி அம்மன் ஆலயம், பெரியமடு கிறிஸ்து அரசர் ஆலயம், விடத்தல் தீவு அடைக்கல மாதா ஆலையம் போன்றவற்றின் புனரமைப்பு பணிகள் இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் இணைப்பாளர் ப.மதன்,மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர்,தொழில்நுற்ப உத்தியோகஸ்தர் மற்றும் மாந்தை மேற்கு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்,ஆலய நிர்வாகத்தினர் என பலர் கலந்துகொண்டு குறித்த வேலைத்திட்டங்களை வைபவ ரீதியாக ஆரம்பித் வைத்தனர்.

மாந்தை மேற்கில் செல்வம் அடைக்கலநாதன்mp ஊடாகபல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு-
Reviewed by Author
on
March 09, 2019
Rating:

No comments:
Post a Comment