ஒன்பது ஏ சித்திகளைப் பெற்ற முல்லைத்தீவு மாணவர்களின் விபரம் -
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின்படி முல்லைத்தீவு வலய கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட ஒன்பது பாடசாலைகளில் இருபது மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
இது குறித்து முல்லைத்தீவு வலய கல்வி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி,
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயத்தில் 7 மாணவர்களும், விசுவமடு மகா வித்தியாலயத்தில் 2 மாணவர்களும், இரணைப்பலை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் 1 மாணவரும் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
மேலும், முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் 2 மாணவர்களும், செம்மலை மகா வித்தியாலயத்தில் ஒரு மாணவரும், குமுழமுனை மகா வித்தியாலயத்தில் 2 மாணவர்களும், கலைமகள் வித்தியாலயத்தில் ஒரு மாணவரும், வித்தியானந்தா கல்லூரியில் 3 மாணவர்களும், சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் 1 மாணவரும் என 20 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
ஒன்பது ஏ சித்திகளைப் பெற்ற முல்லைத்தீவு மாணவர்களின் விபரம் -
Reviewed by Author
on
March 29, 2019
Rating:

No comments:
Post a Comment