மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் கத்தோலிக்க மக்களை அச்சுரூத்தும் வகையில் துண்டுப்பிரசுரம்-படம்
மன்னாரில் உள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் கத்தோலிக்க மக்களை அச்சுரூத்தும் வகையில், திருக்கேதீஸ்வர ஆலயம் சார்ந்த பகுதிகளில் கருப்பு வெள்ளை மற்றும் கலர் வடிவிலான துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை 04-03-2019இரவு மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரியின் போது குறித்த துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது.
மன்னார் திருக்கேதிஸ்வர ஆலயத்திற்கான நுழைவு பகுதிக்கு புதிதாக வரவேற்பு வளைவு அமைப்பது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்து மக்களுக்கும்,கிறிஸ்தவ மக்களுக்கும் இடையில் முறண்பாடு இடம் பெற்றது.
இதன் போது எதிர்பாராத வகையில் சில சம்பவங்கள் இடம் பெற்றது.இந்த நிலையிலே குறித்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த துண்டுப்பிரசுரத்தில் 'மன்னார் வாழ் மத வெறி குரோதம் பிடித்த கிறிஸ்தவ மத குருக்களும்,ஒரு சில கிறிஸ்தவ மக்களும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது'.
இதற்கு சான்றாக 03-03-2019 அன்று மதியம் 02-30 மணியளவில் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலில் நடந்த அச்சுரூத்தல் யாவரும் அறிந்ததே.
குறிப்பு என குறிப்பிடப்பட்டு 'தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதற்கு பதிலாக' 'இரண்டு தமிழ் அமைச்சர்கள்' மன்னாரில் உள்ளனர்(செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன்)இவர்களும் மதம் சார்பாக உள்ளனர்.
இது தொடர்ந்து நடை பெறுமானால் உலக வாழ் இந்து தமிழ் மக்களின் நகர்வு வேறு பாதையை நோக்கி செல்லும்.
'இவ்வன்னம் கிறிஸ்தவ மதவெறியர்களால் பாதீக்கப்படும் இந்து தமிழ்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த துண்டுப்பிரசுரம் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும்,கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Reviewed by Author
on
March 05, 2019
Rating:
Reviewed by Author
on
March 05, 2019
Rating:

No comments:
Post a Comment