சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த மன்னார் குறும்படம்-படங்கள்
இலண்டனில் நேற்றைய தினம் தனியார் ஊடக நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட குறுந்திரை இறுதிப்போட்டியில் எமது மன்னார் மண்ணை சேர்ந்த இளையோர் குழுவால் உருவாக்கப்பட்ட “எல்லை” (The Border)-குறும்படம் மூன்றாமிடம் பெற்றுள்ளதுடன் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும் பெற்றுள்ளது.
தமிழகத்திலிருந்து எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் மன்னார் மற்றும் வடக்கு மீனவர்களின் வாழ்வாதரம் எவ்வாறு பாதிக்கின்றது என கூறும் இக் குறும்படத்தை மன்னார் சண்சொனிக் நிறுவன தலைவர் திரு. பாஸ்கரன் பார்த்தீபன் அவர்கள் கதை மற்றும் தாய்பிக்ஸஸ் சார்பில் தயாரிப்பும் செய்திருந்தனர்.
மன்னார் பகுதியை சேர்ந்த திரு.தனேஸ்வரன் சமிதன் அவர்கள் குறித்த குறும்படத்தின் கதை திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ளார். அயன் திரையரங்கில் சில வருடங்களுக்கு முன், மறைந்த வைத்தியர் அரவிந்தன் அவர்களின் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற “1023 வருடங்கள்” குறும்படத்தை தாயரித்து இயக்கியது குழுவினரே இக் குறும்படத்தையும் தயாரித்து இயக்கியுள்ளனர்.
இக்குறும்பட போட்டியில் 87 குறும்படங்கள் போட்டியில் கலந்து கொண்டதுடன் இறுதி இரண்டு இடங்களை பெற்ற குறும்படத்திற்கு வெறிக்கேடயமும் முதலாம் இடம் பெற்ற குறும்படத்திற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தொகையில் முழு நீள திரைப்படம் உருவாக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறுதி போட்டியில் ஆடுகளம், வடசென்னை படங்களின் இயக்குனர் வெற்றிமாறன், ராம் மற்றும் பருத்திவீரன் படத்தின் இயக்குனர் அமீர் மற்றும் Gan&Ring திரைப்படத்தின் இயக்குனர் லெனின் எம் செல்வமும் கலந்து கொண்டனர். இறுதிவரை முன்னேறி மூன்றாமிடம் பெற்ற “எல்லை” (The Border) குறும்படம் 12 சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பற்றி விருதுகளையும் பெற்று மன்னார் மண்ணுக்கு பெருமை சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்குழுவினரை நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.

Reviewed by Author
on
March 19, 2019
Rating:

No comments:
Post a Comment