தேசத்திற்காக உயிர் நீத்த ராணுவ வீரரின் மனைவிக்கு உயரிய பதவி!
காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுதியில் பாரமுல்லா செக்டரில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிவர் ஷிஷிர் மால். இவர் கடந்த செப்டம்பர் மாதம் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் உயிர்த்தியாகம் செய்தார்.
இந்நிலையில், உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரரின் மனைவி சங்கீதா மாலுக்கு ராணுவத்தில் உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது. சங்கீதா மால் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்த நிலையில், தனது கணவர் இறந்தவுடன் பணியை துறந்தார்.
அதன் பின்னர் ராணுவத்தில் சேர்ப்பதற்கான ஆர்வமும், தகுதியும் சங்கீதா மாலுக்கு இருந்ததால், அவரை ராணுவத்தில் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் தான் சங்கீதா மாலின் பயிற்சிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நேற்றைய தினம் அவருக்கு ‘Army Lieutenant' எனும் உயரிய ராணுவ துணைத்தளபதி பதவி வழங்கப்பட்டுள்ளது.


தேசத்திற்காக உயிர் நீத்த ராணுவ வீரரின் மனைவிக்கு உயரிய பதவி!
Reviewed by Author
on
March 13, 2019
Rating:
No comments:
Post a Comment