அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் புதிய தீர்மானம் -


இலங்கை தொடர்பாக கொண்டுவரப்படவுள்ள தீர்மான வரைபு குறித்து முதலாவது கலந்துரையாடல் நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ளது.

அதேபோன்று எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளதுடன் இம்முறையும் முக்கிய பல நாடுகள் இலங்கைக்கு எதிராக கடும் போக்கை கையாண்டு வருகின்றன.குறிப்பாக ஐ.நாவில் சிறப்பு அந்தஸ்துடைய சர்வதேச அரசசார்பற்ற மனித உரிமைகள் அமைப்புகள் இலங்கைக்கு எதிராக குரல் எழுப்ப உள்ளன.

மறுப்புறம் இலங்கை தொடர்பாக தீர்மானம் ஒன்றை இணை அனுசரணை நாடுகளுடன் இணைந்து முன்வைக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் குறித்த முறைசாராக் கலந்துரையாடலை ஜெனிவாவில் நாளை நடத்தவுள்ளது.
இலங்கையின் பொறுப்புக் கூறுல் மற்றும் மனித விவகார விடயங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முக்கிய நாடுகள் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக பிரித்தானியா , கனடா உள்ளிட்ட நாடுகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் இலங்கை ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை வெளிப்படுத்தாவிடின் சர்வதேசத்தின் நேரடி தலையீட்டிற்கான பொறிமுறையினை உருவாக்கும் வiகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் இலங்கை இன்னும் முழுமைப்பெறவில்லை என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா விஷேட நிபுணர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அந்த வகையில் இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் வழங்கும் வகையிலான தீர்மான முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.இதனை பிரித்தானியாஇ கனடா, ஜேர்மனி , மசிடோனியா மற்றும் மொன்ரனிக்கோ ஆகிய நாடுகள் இணைந்தே இந்த தீர்மானத்தை கொண்டுவரவுள்ளனர். எதிர்வரும் 20ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ளன.
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் புதிய தீர்மானம் - Reviewed by Author on March 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.