கச்சத்தீவு திருவிழா ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக மீனவர்கள்!
கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலயம் பெரும் திருவிழாவிற்கான ஏற்பாட்டு கூட்டத்தை பாரம்பரிய நாட்டு படகு மீனவர்கள் இன்று (11) புறக்கணித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விசைப்படகுகள் ஊடாக அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு, கச்சத்தீவு திருவிழாவுக்கு மக்கள் அழைத்து செல்லப்படுவதால், நாட்டு படகு மீனவர்களுக்கு அதில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனால் வௌிநாடுகளில் வாழும் சுற்றுலாப் பயணிகளுக்கே அந்த திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமது உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தே அவர்கள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
எனவே இந்த விடயத்தில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் உடனடியாக தலையிட்டு, விசைப் படகுகள் இன்றி கச்சத்தீவு செல்லும் பக்தர்களை பயணிகள் படகுமூலம் பாதுகாப்பாக அழைத்து சென்று திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கச்சத்தீவு திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 27ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கச்சத்தீவு திருவிழா ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக மீனவர்கள்!
Reviewed by Vijithan
on
January 12, 2026
Rating:
Reviewed by Vijithan
on
January 12, 2026
Rating:


No comments:
Post a Comment