கைதானவர்களின் எண்ணிக்கையும் 38ஆக அதிகரிப்பு! -
கொழும்பு உள்ளிட்ட நாட்டில் பல இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 26 பேர் குற்றப்புலனாய்வுத் துறையாலும், 3 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினாலும், 9 பேர் பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பொலிஸார் கைது செய்த ஒன்பது பேரையும் நீதிமன்றில் முன்னிப்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 6ம் திகதி வரையில் தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த 9 பேரும் வெல்லம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரே தொழிற்சாலையில் வேலை செய்துவந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலில் 300 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 500 பேர் வரையில் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைதானவர்களின் எண்ணிக்கையும் 38ஆக அதிகரிப்பு! -
Reviewed by Author
on
April 23, 2019
Rating:

No comments:
Post a Comment