விக்னேஸ்வரனுக்கும், சுமந்திரனுக்கும் வித்தியாசமில்லை! -
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் வித்தியாசமில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இவ்வாறு கூறியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கலப்பு பொறிமுறையை சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்தும் வலியுறுத்தினால் அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
ஏனெனில், இலங்கை அரசு தொடர்புபடும் எந்தவொரு விசாரணைப் பொறிமுறையும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தராது.
2015 ஆம் ஆண்டில் இருந்து நாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டுமென வலியுறுத்தி வருகின்றோம்.
இந்நிலையில், வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலப்புப் பொறிமுறை குறித்த பேச்சை ஆரம்பித்துள்ளார்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
விக்னேஸ்வரனுக்கும், சுமந்திரனுக்கும் வித்தியாசமில்லை! -
Reviewed by Author
on
April 03, 2019
Rating:

No comments:
Post a Comment