இலங்கை பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் -பிரித்தானிய பாராளுமன்றத்தில் அரைநிர்வாண..
பிரித்தானியாவில் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று பாராளுமன்றத்தில் அரைநிர்வாண கோலத்தில் குழு ஒன்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளது.
பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவது தொடர்பில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே குறித்த குழுவினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்தின் ஒழுக்க விதிகளை மீறி குறித்த குழுவினர் அரைநிர்வாண கோலத்தில் பின்புறத்தைக் காட்டியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் பாராளுமன்றத்தின் விவாத்திற்கு பாதகம் விளைத்தாக செய்திகள் தெரிவிக்கின்றன. "காலநிலை நீதிக்கான போர்" என்ற தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுத்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் பொதுமக்கள் கலரியில் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்தியுள்ளனர். குறித்த விவகாரம் பாராளுமன்றத்துக்கு பாதுகாப்புக்கு ஆபத்து என தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 12 பேரையும் கைதுசெய்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் தெரிவித்துள்ளது.
இலங்கை பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் -பிரித்தானிய பாராளுமன்றத்தில் அரைநிர்வாண..
Reviewed by Author
on
April 03, 2019
Rating:

No comments:
Post a Comment