அண்மைய செய்திகள்

recent
-

தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் உண்மையான முஸ்ஸீம்களாக இருக்க முடியாது- மன்னார் மாவட்ட ஜமியத்துல் உலமா சபை-(படம்)


இலங்கையில் இடம் பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை வண்மையாக கண்டிப்பதோடு, மனிதாவிமானமற்ற செயலையும், அதனை மேற் கொண்டவர்களையும் மன்னார் மாவட்ட  ஜமியத்துல் உலமா சபை மற்றும் மன்னார் பள்ளிவாசல் சம்மேளனமும் வண்மையாக கண்டிக்கின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் மூர்வீதி ஜீம்மா பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட ஜமியத்துல் உலமா  சபை பிரதி நிதிகள்,மன்னார் பள்ளிவாசல் சம்மேள பிரதி நிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட  ஜமியத்துல் உலமா சபையின் தலைவர் எஸ்.எம். அஸீம் மௌலவி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,

இலங்கை திருநாட்டில் கடந்த 21 ஆம் திகதி ஒரு புனிதமான நாளில் தேவாலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தற்கொலை குண்டு தாக்குதல்கள் மூலம் 350 இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதோடு,500 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இத்தீய செயழினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது இதய பூர்வமான அனுதாபங்களை தெரிவிப்பதுடன், காய மடைந்தவர்கள் மிக விரைவில் குணமடைந்து தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

இத்தீய சக்திகளினுடைய சதி வளையில் சிக்கிவிடாமல் மன்னார் மாவட்ட கத்தோழிக்க, இஸ்லாமிய,இந்து மக்கள் ஒற்றுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் வாழ் வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

இந்த மாவட்ட மக்கள் தொடர்ந்தும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக மன்னார் ஜமியத்துல் உலமா  சபை மற்றும் பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் புத்திஜீவிகள் ஆகியோர் இணைந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களை சந்தித்து குறித்த சம்பவத்திற்கு எமது கண்டனத்தையும்,பாதீக்கப்பட்ட மக்களுக்கான அனுதாபத்தையும் தெரிவித்தோம்.

இங்கு இருக்கின்ற முஸ்ஸீம்களாகிய நாங்கள் இச்செயலை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த மோசமான செயலை மேற்கொண்டவர்கள் போலி இஸ்ஸாமிய பெயர்களை தாங்கியவர்களாகவே நாங்கள் கருதுகின்றோம்.
அவர்கள் உண்மையான இஸ்லாமியர்களாக இருக்க முடியாது.

எனவே அவர்களின் இச் செயலை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம். குறித்த தாக்குதலில் உயிழந்த மக்களின் ஆன்மா சந்தியடையவும்,பாதீக்கப்பட்ட மக்களின் உள்ளங்களில் பொறுமை ஏற்படவும்,மக்கள் மீண்டும் சகஜ வாழ்விற்கு உடனடியாக திரும்ப இறைவன் துனை புறிய வேண்டும்.மக்களின் துன்பத்தில் நாங்களும் பங்கு கொள்கின்றோம்.

மேலும் இன்று 26-04-2019 வெள்ளிக்கிழமை இடம் பெற இருந்து ஜீம்மாத்தொழுகை நிறுத்தப்பட்டுள்ளது.

முஸ்ஸீம் சமூக கலாச்சார திணைக்களம்,அகில இலங்கை  ஜமியத்துல் உலமா சபையின் வேண்டு கோளுக்கு அமைவாக மன்னார் நகரப்பகுதியில் மக்கள் அதிகமாக ஒன்று கூடுவதினால் ஜீம்மா பிரசங்கத்தை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எனவே பாதுகாப்பு தரப்பினரின் அறிவுரைக்கு அமைவாகவும் மன்னார் நகர பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல் நிர்வாகத்தினலும் தீர்மானித்து இன்று வெள்ளிக்கிழமை (26) ஜீம்மா பிரசங்கத்தை நிறுத்தி வழமையான தொழுகைகள் இடம் பெற்றது.என அவர் மேலும் தெரிவித்தார்.



தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் உண்மையான முஸ்ஸீம்களாக இருக்க முடியாது- மன்னார் மாவட்ட ஜமியத்துல் உலமா சபை-(படம்) Reviewed by Author on April 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.