அண்மைய செய்திகள்

recent
-

மக்கள் அமைதியுடனும்,மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து கொண்டுள்ள இக்காலத்திலே இவ்வாறான ஒரு சம்பவம் இடம் பெற்றுள்ளமை கண்டிக்கத்தக்கது.-மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்.

நாட்டில் இடம் பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாக அமைப்புக்களை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம்.இச்சம்பவத்தை ஒரு சாதாரண விடையமாக நாம் கருத முடியாது என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் 14 ஆவது அமர்வு இன்று வெள்ளிக்கிழமை (26) காலை 9.30 மணியளவில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம் பெற்றது.

சபை அமர்வு இடம் பெறுவதற்கு முன் நகர சபையின் தலைவர்,உப தலைவர் மற்றும் சக உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு பட்டி அணிந்து,மெழுகுவர்த்தி ஏற்றி உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து தலைமை உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,,,,

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் பாரியதொரு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. தேவாலயங்கள் மற்றும் விடுதிகளில் கொடுரத்தனமாக தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவங்களில் 350 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு,பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாத அமைப்புக்களை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம். இதனை ஒரு சாதாரணமான விடையமாக நாம் கருத முடியாது.

குறித்த தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்து,தீவிரவாதத்தில் ஈடுபட்டவர்கள் மக்கள் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்.

நாட்டில் தற்போது அச்சம் நிலவுகின்ற காலம் வந்து விட்டது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வந்துள்ளது.ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.வீடுகளில் திடீர் திடீர் சோதனைகள் இடம் பெற்று வருகின்றது.யுத்த காலத்தைப்போல் தற்போது காட்சியளிக்கின்றது.இந்த விடையங்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்கள் அமைதியுடனும்,மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து கொண்டுள்ள இக்காலத்திலே இவ்வாறான ஒரு சம்பவம் இடம் பெற்றுள்ளமை கண்டிக்கத்தக்கது.என தெரிவித்தார்.

மேலும் வவுனியாவில் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்த வவுனியா நகர சபை பணியாளர்கள் 4 பேரூக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







மக்கள் அமைதியுடனும்,மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து கொண்டுள்ள இக்காலத்திலே இவ்வாறான ஒரு சம்பவம் இடம் பெற்றுள்ளமை கண்டிக்கத்தக்கது.-மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன். Reviewed by Author on April 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.