செல்வம் அடைக்கலநாதனின் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை-மன்னார் இந்து அமைப்புக்கள் இணைந்து கூட்டாக கண்டன அறிக்கை-
வன்னி பாரளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் 3-04-2019 அன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பாக மன்னார் இந்து மகா சபையும் மன்னார் இந்துமத பீடமும் மற்றும் மன்னார் இந்துகுருமார் பேரவையும் இணைந்து கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் சமயம் தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கும் போது அது பற்றி முழுமையான தெளிவில்லாமல் அது தொடர்பாக கருத்துக்கள் கூறும் போது அவை பிழையான கருத்துக்களாக மாறி சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றது.
இப்பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் வேளையில் இவ்வழக்கோடு சம்மந்தப்பட்டவர் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரும் வேளையில் இது தொடர்பாக தமிழ் மக்களின் பிரதி நிதியாகவுள்ள செல்வம் அடைக்கலநாதன் அவர்கள்
பாதிரியார் மார்க்கஸ் அடிகளார் பற்றி கூறிய கூற்று உண்மைக்கு புறம்பானதும் அவரை காப்பாற்றும் நோக்கில் கூறப்பட்ட கூற்றாகவே நாம் கருதுகின்றோம்.
இவ்விடையங்கள் தொடர்பாக நாம் எமது கண்டனத்தினை தெரிவிப்பதோடு எதிர்காலத்தில் பொறுப்பான நிலையில் உய்ள்ளவர்கள் பக்கச்சார்பின்றி நடுநிலையாக செயற்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.
செல்வம் அடைக்கலநாதனின் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை-மன்னார் இந்து அமைப்புக்கள் இணைந்து கூட்டாக கண்டன அறிக்கை-
Reviewed by Author
on
April 05, 2019
Rating:
Reviewed by Author
on
April 05, 2019
Rating:


No comments:
Post a Comment