அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையினர் மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்திப்பு-(படம்)
அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையினருக்கும், மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று 28-04-2019 ஞாயிற்றுகிழமை காலை மன்னார் ஆயர் இல்லத்தில் இடம் பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்க மற்றும் முஸ்லீம் மக்களின் நல்லுறவு தொடர்ந்தும் பேனப்பட வேண்டும் என்ற நோக்குடன் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
அகில இலங்கை ஜமியத்துல் உலமா அமைப்பினருடன் நிர்வாக உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் இணைந்து மன்னார் மறைமாவட்ட ஆயருடன் குறித்த சந்திப்பில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த சந்திப்பின் போது கடந்த உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை அன்று (21-04-2019) நாட்டில் இடம் பெற்ற துக்க கரமான சம்பவத்திற்கு அனுதாபத்தையும் கண்டணத்தையும் ஜமியத்துல் உலமா அமைப்பினர் மன்னார் மறைமாவட்ட ஆயரிடத்தில் தெரிவித்துக் கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் முஸ்ஸீம்கள் மற்றும் கத்தோழிக்க மக்களுக்கு இடையிலான உறவு இத்தகைய துன்ப கரமான செயலினால் சீர் கெட்டு விடக்கூடது என்பதுடன், நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக பள்ளிவாயில்கள் , ஆலயங்களில் சமய சொற்பொழிவுகள் இடம் பெற வேண்டுமென ஆயரிடம் வேண்டுகோள் விடுத்ததுள்ளனர்.
அத்துடன் இவ்வாறான அடாவடித்தனங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
மேலும் கடந்த காலங்களைப் போன்று இரு சமயத் தவர்களின் உறவு முறை எவ்வாறு இருந்ததோ அவ்வாறே தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
April 28, 2019
Rating:
No comments:
Post a Comment