விடுதலைப் புலிகளுக்கும் ஐ.எஸ். அமைப்புக்கும் இடையில் பெரிய வித்தியாசம் உள்ளது: ஜனாதிபதி -
விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் இஸ்லாமிய அரசு அமைப்பு என்பன வெவ்வேறான அமைப்புகள் எனவும் இதற்கு அமைய பொறுமையாக செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களின் பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் தெளிவாக குழப்பமின்றி பொறுமையாக செயற்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் போன்று வாயில் வருவதை எல்லாம் பேசாமல், ஐ.எஸ். அமைப்பு என்பது என்ன என்பதை தெளிவாக புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.
இனவாதம் மற்றும் பயங்கரவாதம் என்பது வெவ்வேறானவை. பயங்கரவாதம் எமக்கு நன்கு பழக்கமானது.
ஆனால், சர்வதேச பயங்கரவாதம் என்பதை நாங்கள் ஊடகங்களில் மாத்திரமே கேட்டறிந்துள்ளோம். துரதிஷ்டவசமாக சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி அரசியல் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தி மக்களை பதற்றத்திற்கு உள்ளாகி தமது காரியத்தை செய்வதே ஐ.எஸ் அமைப்பின் அரசியல் நோக்கம்.
மேற்குலக அரசியல் சிந்தனை மற்றும் மேற்குலக மதஙகளை அடிப்படையாக கொண்டே இவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.
இதன் காரணமாகவே குறிப்பாக கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்கினர். இதனால், ஐ.எஸ். அமைப்பின் பின்னணியை எடுத்துக்கொண்டதால், நாம் அதனை புத்திசாலித்தனமாக பார்க்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் அரசியலை மறந்து விட வேண்டும்.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், ஐ.எஸ். அமைப்புக்கும் இடையில் பெரிய வித்தியாசம் உள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசும் போது, நாங்கள் விடுதலைப் புலிகளை தோற்கடித்தோம் என்று பலர் வீரர்களை போல பேசினர்.
அமெரிக்காவின் பென்டகனை கூட காப்பாற்ற முடியாமல் போனது. அமெரிக்காவினாலும் அதனை எதிர்கொள்ள முடியாமல் போனது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சர்வதேசத்தை சேர்ந்த சிறிய தரப்பினரே இலங்கைக்கு உதவினர்.
பெரும்பாலான சர்வதேச நாடுகள் விடுதலைப் புலிகளின் பக்கம் நின்றன. மேற்குலக நாடுகள் விடுதலைப் புலிகளையே ஆதரித்தன எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும் ஐ.எஸ். அமைப்புக்கும் இடையில் பெரிய வித்தியாசம் உள்ளது: ஜனாதிபதி -
Reviewed by Author
on
April 27, 2019
Rating:

No comments:
Post a Comment