மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தின் பின்னனியில் அரசியல் பின்புலம்.-நகர சபையின் முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்-
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தின் பின்னனியில் அரசியல் காணப்படுவதாகவும், வீட்டுத்திட்டத்தை வழங்குவதில் மன்னார் உதவி பிரதேசச் செயலாளர் உள்ளிட்ட சிலர் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே செயற்படுவதாகவும், இதனால் பாதீக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதீக்கப்பட்டு வருவதாக மன்னார் நகர சபையின் முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று (11) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பல்வேறு கிராமங்களில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீட்டுத்திட்டங்கள் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் உதவி பிரதேசச் செயலாளர் அரசியல் வாதிகளின் பின் புலத்தில் செயல்பட்டுக்கொண்டு பாதீக்கப்பட்ட மக்களை மென்மேலும் துண்புறுத்தி வருகின்றார்.
அதிகலவான வீட்டுத்திட்டங்கள் அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களுக்கே வழங்கப்பட்டு வருகின்றது.என்னிடம் பலர் நேரடியாக வந்து முறையிட்டுள்ளனர். ஆனால் உண்மையாக பாதீக்கப்பட்ட,தேவையுடையவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை.அவர்கள் தொடர்ந்தும் புறக்கனிக்கப்பட்டு வருகின்றனர்.
மக்களை நாளாந்தம் மன்னார் பிரதேசச் செயலகம்,மன்னார் நகர சபை என அழைய விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இப்பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
குறித்த வீட்டுத்திட்டத்தை தீர்மானிப்பது மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையா அல்லது ஆளும் கட்சி அரசியல்வாதிகளா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சம்மந்தமே இல்லாத அரசியல் வாதிகள் மக்களை ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்று பிரதேசச் செயலாளரை அழைத்து வீட்டுத்திட்டம் வழங்குகின்ற நிலையே தற்போது காணப்படுகின்றது.
-சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய முறையில் குறித்த வேளைத்திட்டத்ததை முன்னெடுக்க வேண்டும்.
ஆனால் உண்மையில் பாதீக்கப்பட்ட மக்களுக்கு குறித்த வீட்டுத்திட்டம் போய்ச் சேரவில்லை.பாதீக்கப்பட்ட மக்கள் என்னிடம் பல முறை முறையிட்டுள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக நான் பல தடவைகள் மன்னார் உதவி பிரதேசச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இது வரை உரிய தீர்வு மன்னார் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படவில்லை. குறித்த செயற்பாடுகளை நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.
இதன் பின்புலத்தில் அரசியல் வாதிகளும் இருக்கின்றார்களா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவ்விடையம் தொடர்பாக மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.
எனினும் அழையா விருந்தாளிகளாக சில அரசியல் பிரதி நிதிகள் கலந்து கொள்ளுவதாக அவர் தெரிவித்தார். மன்னார் உதவி பிரதேசச் செயலாளரின் செயற்பாடுகள் வண்மையாக கண்டிக்கத்தக்கது.
தமது எதிர்கால பதவியினை தக்க வைத்துக் கொள்ளுவதற்காக அரசியல் புன்புலத்தினுடாக,அரசியல் சிபாரிசினூடாக வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது. உண்மையில் பாதீக்கப்பட்ட எத்தனையே குடும்பங்கள் வீடுகள் இன்றி தவிக்கின்ற நிலையில், பக்கச்சார்புடன் குறித்த வீட்டுத்திட்டம் வழங்கப்படுகின்றது.
மொட்டைக் கடிதங்களையும் தூக்கிப்பிடித்துக் கொண்டு வீட்டுத்திட்டங்களை இடை நிறுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் பின்னனியிலும் அரசியல் வாதிகளே காணப்படுகின்றனர்.மன்னார் உதவி பிரதேசச் செயலாளரை இயக்குகின்றது அரசியல் வாதிகளாகவே இருக்கின்றனர். எதிர் காலத்தில் இவ்விடையங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி பாதீக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும்.
மன்னார் உதவி பிரதேச செயலாளரின் குறித்த செயற்பாடுகளை வண்மையாக கண்டிக்கின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

        Reviewed by Author
        on 
        
April 11, 2019
 
        Rating: 
      
        Reviewed by Author
        on 
        
April 11, 2019
 
        Rating: 

No comments:
Post a Comment