20இலட்சம் ரூபா செலவில் முருங்கனில் தினச் சந்தை கட்டிடத்திற்கு அடிக்கல்
20இலட்சம் ரூபா செலவில் முருங்கனில் தினச் சந்தை கட்டிடத்திற்கு அடிக்கல் நடப்பட்டது
வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களின் அபிவிருத்தி நிதியில் முருங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் தினச்சந்தை கட்டிடத்திற்கான அடிக்கல் 08-05-2019 காலை பத்து மணியளவில் நடப்பட்டது
உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து அவர்களுக்கான ஜீவனோபாய வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்களால் 20இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தி.பரஞ்சோதி அவர்களின் தலைமையில் நடை பெற்ற தினச்சந்தைக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் நானாட்டான் பிரதேச சபையின் உபதவிசாளர் புவனம் சிவமோகன் எம்பியின் பிரதிநிதி நடேசானந்தன் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்களான ஜொனி மற்றும் திருமதி வோல்ட்சன் மதத்தலைவர்கள் நானாட்டான் பிரதேச சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டார்கள்.
20இலட்சம் ரூபா செலவில் முருங்கனில் தினச் சந்தை கட்டிடத்திற்கு அடிக்கல்
Reviewed by Author
on
May 09, 2019
Rating:

No comments:
Post a Comment