மெக்கா நோக்கி ஏவப்பட்ட 2 ஏவுகணைகள் தகர்ப்பு-
மெக்காவை நோக்கி வந்த 2 ஏவுகணைகளை சவுதி அரேபிய ராணுவத்தின் எதிர்ப்பு ஏவுகணைகள் தடுத்து தகர்த்தன.
ஏமனில் அரசு படைகளுடன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிலும் தாக்குதல் நடத்துகின்றனர்.
சவுதி அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைன்களை, அண்மையில் கிளர்ச்சியாளர்கள் தகர்த்ததால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
அதற்கு பதிலடியாக கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள ஏமன் தலைநகரில் சவுதி விமானப்படை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது. அதற்கு பழிவாங்கும் விதத்தில் கிளர்ச்சியாளர்கள் சவுதிஅரேபியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
அந்த 2 ஏவுகணைகளை சவுதி ராணுவம் நடுவானில் இடைமறித்து அழித்தது. ரமலான் நோன்பு கடைபிடிக்கும் தருணத்தில் மெக்கா நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதை தொடர்ந்து, சவுதி அரேபியா முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ராணுவம்தான் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணைகளை அளித்ததாக சவுதி குற்றம்சாட்டி இருக்கிறது.
மெக்கா நோக்கி ஏவப்பட்ட 2 ஏவுகணைகள் தகர்ப்பு-
Reviewed by Author
on
May 21, 2019
Rating:

No comments:
Post a Comment