அல்டிமா துலே எனும் விண்பொருளில் நீர் உள்ளது
நெப்டியூன் கிரகம் அருகே உள்ள அல்டிமா துலே எனும் விண்பொருளில் நீர் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக நாசா கூறியுள்ளது.
650 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விண் பொருட்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட நாசாவின் நியூ ஹாரிசன் விண்கலம், அல்டிமா துலே என்ற விண் பொருள் ஒன்றை 2014ஆம் ஆண்டு கண்டுபிடித்து, அதை முடிந்த அளவிற்கு நெருங்கிச் சென்றது. 30 கிலோ மீட்டர் அகலம் கொண்ட அல்டிமா துலேவில் நியூ ஹாரிசன் விண்கலம் மேற்கொண்ட ஆய்வில், அந்த விண் பொருளில் பனி வடிவில் நீர் இருப்பதும், மெத்தனால், இயற்கை மூலக்கூறுகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
அல்டிமா துலே எனும் விண்பொருளில் நீர் உள்ளது
Reviewed by Author
on
May 21, 2019
Rating:

No comments:
Post a Comment