ரயில் தடத்தில் கவிழ்ந்த லொறி... பெட்ரோல் பிடிக்க சென்ற 55 பேர் உடல் கருகி பலி -
நைஜர் தலைநகர் நியாமில் உள்ள சர்வதேச விமானநிலையத்திற்கு அருகேயே இச்சோக சம்பவம் நடந்துள்ளது. பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லொறி ரயில் தடத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்நிலையில் லொறியிலிருந்து கசிந்த பெட்ரோலை பிடிக்க மக்கள் கூட்டமாக கூடியுள்ளனர். தீடீரென எதிர்பாராத நிலையில் லொறி பயங்கரமாக வெடித்து சிதறியுள்ளது. இதில், 55 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர், 36 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லொறி வெடித்ததை தொடர்ந்து தீ அங்கிருந்த வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கும் பரவியதால் பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரயில் தடத்தில் கவிழ்ந்த லொறி... பெட்ரோல் பிடிக்க சென்ற 55 பேர் உடல் கருகி பலி -
Reviewed by Author
on
May 06, 2019
Rating:

No comments:
Post a Comment