ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 6 பேர் பலி... 16 பேர் படுகாயம் -
ஆப்கன் தலைநகர் காபூலில் இயங்கி வரும் ராணுவ அகாடமியின் நுழைவு வாயிலில் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கல்லூரியில் இருந்து அனைவரும் வெளியேறி கொண்டிருந்த சமயத்தில் மர்ம நபர் ஒருவர், கல்லூரிக்குள் நுழைய முயன்றுள்ளார்.
இதனை பார்த்த இராணுவ வீரர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். அதற்குள் அந்த நபர் திடீரென குண்டுகளை வெடிக்க செய்துள்ளார்.
இதில் 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 16 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலானது தலிபான் பிரதிநிதிகள் மற்றும் மூத்த ஆப்கானிய அரசியல்வாதிகள் மாஸ்கோவில் சந்தித்து, 8 ஆண்டு கால மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஒரு தீர்வு காணும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.
இது தோல்வியில் முடிந்த நிலையில் 3 நாட்கள் கழித்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 6 பேர் பலி... 16 பேர் படுகாயம் -
Reviewed by Author
on
May 31, 2019
Rating:

No comments:
Post a Comment