அண்மைய செய்திகள்

recent
-

பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி! அமைச்சர்களின் முழு விபரம் வெளியானது


இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இன்று இரண்டாவது முறையாகவும் பதவியேற்றுக்கொண்டுள்ளார். இது குறித்த நிகழ்வுகள் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி பீடம் ஏறியுள்ளது.

இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி பீடம் ஏறியுள்ளது. பிரதமர் மோடி, ஜனாதிபதி முன்னிலையில், இன்று பதவியேற்றுக்கொண்டார்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில், 25 அமைச்சரவை அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள், 9 தனிப்பொறுப்புடன் கூடிய இணைய அமைச்சர்கள் என மொத்தம் 58 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகிய இருவரும் இடம்பிடித்துள்ளனர். அந்த நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவை அமைச்சர்கள்.....
நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், அர்ஜூன் முண்டா, அரவிந்த் சாவந்த், தர்மேந்திர பிரதான், டாக்டர் ஹர்ஷ் வர்தன், சதானந்த கவுடா, கஜேந்திர சிங் ஷெகாவத், கிரிராஜ் சிங், ஹர்சிம்ரத் கவுர் பாதல், மகேந்திர நாத் பாண்டே, முக்தார் அப்பாஸ் நக்வி, நரேந்திர சிங் தோமர், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், பிரகலாத் ஜோஷி, ரமேஷ் பொக்ரியால் நிஷாங், ராம் விலாஸ் பாஸ்வான், ரவி சங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தாவர்சந்த் கெலாட்.
இணை அமைச்சர்கள்.....
அர்ஜூன் ராம் மேக்வால், அனுராக் சிங் தாக்கூர், அங்காடி சுரேஷ் சன்னபசப்பா, அஷ்வினி குமார் சவுபே, பாபுல் சுப்ரியோ, தான்வே ராவ்சாகேப் தாதாராவ், தோத்ரே சஞ்சய் ஷாம்ராவ், பகன் சிங் குலாஸ்தே, ஜெனரல் வி.கே.சிங் (ஓய்வு), கிஷன் ரெட்டி, கைலாஷ் சவுத்ரி, கிரிஷன் பால், நித்யானந்த் ராய், பர்ஷோத்தம் ரூபாலா, பிரதாப் சந்திர சாரங்கி, ரத்தன் லால் கட்டாரியா, ராம்தாஸ் அத்வாலே, ராமேஸ்வர் தேலி, ரேணுகா சிங் சருதா, சாத்வி நிரஞ்சன் ஜோதி, சஞ்சீவ் குமார் பால்யன், சோம் பர்காஷ், முரளீதரன், தேவஸ்ரீ சவுத்ரி,
இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)....
டாக்டர் ஜிதேந்திர சிங், கிரன் ரிஜிஜு, ஹர்தீப் சிங் பூரி, மன்சுக் எல்.மாண்டவியா, பிரகலாத் சிங் பட்டேல், ராஜ் குமார் சிங், ராவ் இந்தர்ஜித் சிங், சந்தோஷ் குமார் கேங்வார், ஸ்ரீபாத் யெஸ்சோ நாயக்.
இதேவேளை, அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு பிறவு வெளியாகும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி! அமைச்சர்களின் முழு விபரம் வெளியானது Reviewed by Author on May 31, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.