மன்னாரில் சம்பவம்-இரட்டைப் பிள்ளைகளில் ஒன்று கிணற்றுக்குள் விழுந்து மரணம்.
வளவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த இரட்டைப் பிள்ளைகளில் ஒருவன்
கிணற்றுக்குள் விழுந்து மரணத்தை தழுவிக் கொண்ட சம்பவம் ஒன்று மன்னாரில் நடைபெற்றுள்ளது.
இவ் சம்பவம் மன்னார் பெரியகமம் பகுதியில் செவ்வாய் கிழமை (07.05.2019)
பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பேசாலையைச் சேர்ந்த றொசான் பர்ணாந்து குடும்பத்தார் மன்னாரிலுள்ள
பெரியகமம் பகுதியிலுள்ள தங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்று அங்கு ஒரு
சில தினங்கள் தங்கியிருந்துள்ளனர்.
இவ்வேளையில் கடந்த செவ்வாய் கிழமை 07-05-2019 பிற்பகல் றொசான் பர்ணாந்து என்பவரின் இரட்டைப் பிள்ளைகள் பக்கத்து வீடாகிய தங்கள் மாமியாரின் வீட்டு வளவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் இரண்டு பிள்ளைகளின் ஒருவரை காணாது அவ் பிள்ளையின் பெற்றோர் உட்பட உறவினர்கள் தேடியபோது றொசான் சஞ்சேய் பர்ணாந்து (வயது 02) என்ற இரட்டைகளில் ஒன்று கிணற்றுக்குள் இருந்து உயிரற்ற நிலையில் சம்பவம் அன்றே மீட்டுள்ளனர்.
வளவுக்குள் இருந்த கிணறு மிகவும் பதிவானதாக இருந்தமையாலே இவ் சிறுவன் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் சிறுவனின் மரண விசாரனையை மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்கொண்டதுடன் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து சிறுவனின் சடலம் பேசாலை சேமக்காலையில் புதன் கிழமை 08-05-2019 ) நல்லடக்கம் செய்யப்பட்டது.

Reviewed by Author
on
May 09, 2019
Rating:

No comments:
Post a Comment