மன்னாரில் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு குறைவு-சோதனைகளுக்கு மத்தியில் பாடசாலையினுள் செல்ல அனுமதி-படங்கள்
நாட்டில் இடம் பெற்ற அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து நாட்டில் உள்ள பாடசாலைகள் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் முழுமையாக சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்ட நிலையில் மன்னாரில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் செல்லும் மாணவர்களின் புத்தகப்பை கடும் சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டு மாணவர்கள் பாடசாலைகளுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார்,இராணுவம், பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து தமது பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் புத்தகப்பை பரிசோதித்து,பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மன்னார் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள் பாடசாலைகளில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தரம்-06 முதல் உயர் தரம் வரையிலான மாணவர்களுக்கே இன்றைய தினம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் பாடசாலை பகுதிகளில் வாகனங்களை நிறுத்த பொலிஸார் தடை விதித்துள்ளனர்.மாணவர்களை பெற்றோர் அழைத்து வந்து விடுவதை காணக்கூடியதாக உள்ளது. எனினும் இன்றைய தினம் மன்னாரில் உள்ள பாடசாலைகளுக்கு சென்ற மாணவர்களின் வரவு மிக குறைவடைந்த நிலையில் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகள் முழுமையாக சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்ட நிலையில் மன்னாரில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் செல்லும் மாணவர்களின் புத்தகப்பை கடும் சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டு மாணவர்கள் பாடசாலைகளுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார்,இராணுவம், பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து தமது பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் புத்தகப்பை பரிசோதித்து,பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மன்னார் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள் பாடசாலைகளில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தரம்-06 முதல் உயர் தரம் வரையிலான மாணவர்களுக்கே இன்றைய தினம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் பாடசாலை பகுதிகளில் வாகனங்களை நிறுத்த பொலிஸார் தடை விதித்துள்ளனர்.மாணவர்களை பெற்றோர் அழைத்து வந்து விடுவதை காணக்கூடியதாக உள்ளது. எனினும் இன்றைய தினம் மன்னாரில் உள்ள பாடசாலைகளுக்கு சென்ற மாணவர்களின் வரவு மிக குறைவடைந்த நிலையில் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு குறைவு-சோதனைகளுக்கு மத்தியில் பாடசாலையினுள் செல்ல அனுமதி-படங்கள்
Reviewed by Author
on
May 06, 2019
Rating:

No comments:
Post a Comment