தலைவர் பிரபாகரன் மீது ஒருபோதும் பொய்குற்றச்சாட்டினை நான் முன்வைக்க மாட்டேன்! கருணா அம்மான் -
தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
நான் இராணுவத்தளபதியாக செயற்பட்டிருந்த காலப்பகுதியில் ஒரு முஸ்லிம் நபரைக் கூட தண்டிப்பதற்கு எமக்கு உத்தரவிட்டதுமில்லை. அனுமதித்ததும் இல்லை. இறுதிவரையில் அவர் அவ்வாறான நிலைப்பாட்டுடன் தான் இருந்தார்.
அரசியல் குளிர்காய்வதற்காக உண்மைகளை மறைக்க முடியாது.
முஸ்லிம் தலைவரை இலக்கு வைப்பதையோ முஸ்லிம் மக்களின் மத்தியில் பதற்றத்தினை ஏற்படுத்துவதையோ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை.
அதனை கொள்கையாகவும் வகுத்து பற்றுறுதியாக செயற்பட்டு வந்திருந்தார். தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அவர் என்றுமே விரும்பியது கிடையாது அதுவே அவருடைய முடிவாகவும் இருந்தது.
இதனைவிடவும் தமிழ் முஸ்லிம் இன உறவைப் பேணுவதற்கான பலபேச்சுக்கள் விடுதலைப்புலிகளுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்றிருந்தது.
குறிப்பாக மு.கா தலைவர் ஹக்கீமை வன்னிக்கு அழைத்து தலைவர் பிரபாகரன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். அப்பேச்சுக்களின்போது நானும் கலந்துகொண்டிருந்தேன். அதன்போது தலைவர் பிரபாகரன் நாங்கள் உரிமைகளுக்காக போராடுகின்றோம். நீங்களும் தமிழ் பேசுகின்ற சமுகம் ஆகவே உங்களுக்கு தேவையான ஒத்தாசைகளை வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம் என்று தான் ஹக்கீமிடம் கூறினார்.
மாறாக முஸ்லிம்களுக்கும் தானே தான் தலைவர் என்று கூறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
- Virakesari-
தலைவர் பிரபாகரன் மீது ஒருபோதும் பொய்குற்றச்சாட்டினை நான் முன்வைக்க மாட்டேன்! கருணா அம்மான் -
Reviewed by Author
on
May 26, 2019
Rating:

No comments:
Post a Comment