கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியிலுள்ள சிவன் ஆலய விவகாரம்! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு -
இந்த விடயத்தை திருகோணமலை தமிழர் சமூக அமைப்பை சேர்ந்த நிக்கலஸ் தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி தமிழ் பத்திரிகையொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும்,
கன்னியா வெந்நீரூற்று பகுதியிலுள்ள சிவன் ஆலயத்தின் அருகிலுள்ள கிணற்றினை தொல்லியல் துறையினர் வியாழக்கிழமை மூட முற்பட்ட வேளை அப்பகுதி இளைஞர்கள் தடுத்தனர்.
இதையடுத்து நான் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்டு கிணறு மூடுவதை நிறுத்துமாறு கோரினேன். அத்துடன் அரச அதிபருடன் பேசினேன்.
இந்த நிலையில் மாவட்ட அரச அதிபரை காலை கன்னியாவுக்கு அழைத்து சென்றோம். அரச அதிபர் அங்குள்ள நிலைமையை பார்வையிட்டு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெறும் வரை கிணறு மூடுவதை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் ஆலயம் சார்பில் பேசுவதற்கு எவரும் இல்லையென நாம் கூறியதுடன், கூட்டத்தில் பங்குபற்றும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படுவார்கள் என்பது தெரியாது என அரச அதிபரிடம் குறிப்பிடோம்.
எனவே மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திற்கு முன்னர் எம்மை சந்தித்து எமது விளக்கத்தை கேட்க வேண்டும் என்றோம். இதற்கு சந்தர்ப்பம் தருவதாக அரச அதிபர் குறிப்பிட்டார்.
தற்போது ஆலய காணியின் உரிமையாளரைக் கண்டுபிடித்துள்ளோம். அவரையும் ஆலய நிர்வாகத்தினர், ஆதீன குழு உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து சென்று ஆலயம் தொடர்பில் விளக்கம் கொடுக்கவுள்ளோம்.
ஆலயத்துக்கு கிணறு இல்லாமல் போனால் ஆலயத்தை அகற்ற முடியுமென்றே கிணற்றை மூடுகின்றனர் என நிக்கலஸ் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியிலுள்ள சிவன் ஆலய விவகாரம்! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு -
Reviewed by Author
on
May 27, 2019
Rating:

No comments:
Post a Comment