விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒப்பிட முடியாது! ஞானசாரர் விளக்கம் -
தமிழ் பத்திரிகை ஒன்றின் வார வெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளுடைய நோக்கம் அரசியல்மயப்பட்டது. ஆனல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இலக்கு அவ்வாறானதல்ல. காபீர்கள் மற்றும் அந்நிய மதத்தவர்களைக் கொலை செய்வதே எமது இலக்கென ஐ.எஸ். தலைவர் அபூபக்கர் அல்பக்தாதி கூறுகின்றார்.
உலகம் இருக்கம் வரையில் இந்த இலக்கிலிருந்து நாம் விலகப் போவதில்லை என்கின்றார். நாளை ஐ.எஸ். அல்லது வேறொரு அமைப்பும் இதே இலக்குடன் வரலாம். தலிபான், அல்கொய்தா, அல்ஷாப் மற்றும் ஜமாத் இஸ்லாம் இவ்வாறு 52 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் உலகில் காணப்படுகின்றன. இவையனைத்துமே தற்கொலைக் குண்டுதாரிகளாகவே காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒப்பிட முடியாது! ஞானசாரர் விளக்கம் -
Reviewed by Author
on
May 26, 2019
Rating:

No comments:
Post a Comment