மன்னார் சாந்திபுரம் ஆபத்தான வெடி பொருட்கள் செயலிழக்க வைப்பு-படங்கள்
செய்தி இணைப்பு-02
மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை 03-05-2019 மாலை கண்டு பிடிக்கப்பட்ட வெடி பொருட்கள் நேற்று 03-05-2019 இரவு பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில் உள்ள பற்றைக்குள் மர்மமான இரண்டு பொதிகளை அவதானித்த நபர் ஒருவர் மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் விரைந்து சென்று குறித்த இரு பொதிகளை பார்வையிட்டதோடு, சோதனையிட்டனர்.
இதன் போது குறித்த பொதியில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் 05 கிலோவிற்கு மேற்பட்டவையும் மற்றும் டெற்றனேற்றர் குச்சுகள் மின் சேமிப்பு கருவிகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் பொலிஸாருடன் இணைந்து அப்பகுதியில் தேடுதல்களை மேற்கொண்டனர்.மீட்கப்பட்ட சி-4 வெடி பொருட்களை நீதி மன்ற அனுமதியிடன் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை03-05-2019 இரவு 8 மணிக்கு பின்னர் குறித்த வெடி பொருட்கள் படையினரினால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
May 04, 2019
Rating:

No comments:
Post a Comment