கருப்பையில் நீர்கட்டியால் ஏற்படும் வலியிலிருந்து விடுதலை பெற வேண்டுமா?
இது பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (pcos/pcod) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது.
கர்ப்பப்பையில் கட்டி ஏற்படுவது மிகவும் சாதாரணமான ஒன்று ஆகும்.
குழந்தையை கர்ப்பப்பையில் சுமக்கும் காலத்தில் இவ்வகை கட்டிகள் தோன்றுகின்றன.
இந்த கட்டிகள் ஒருவேளை பெரியதாக இருந்தால் அவை பெண்களுக்கு அடிவயிற்றுவலி, வயிறு வீக்கம், பின் முதுகு வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
இதனை ஆரம்பக்கட்டத்திலேயே கவனிக்கா விட்டால் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
இதிலிருந்து விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உணவில் சேர்த்து கொண்டாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

- அதிக நார்ச்சத்துள்ள உணவுகளான பேரிச்சை, ஆரஞ்சு, பருப்பு, பட்டாணி போன்ற பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இவை கர்ப்பப்பை புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.
- இந்த சூழ்நிலையில் உங்கள் உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டியது அவசியம். எனவே அளவான புரோட்டின் இருக்கும் உணவுகளான மீன், சிக்கன் போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
- ஒமேகா 3 அமிலம் அதிகமுள்ள உணவுகளான மீன்கள், தானியங்கள் கருப்பை நீர்கட்டிகளில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
- ஒரு கப் சூடான செவ்வந்தி பூ டீ குடிப்பது இதன் அறிகுறிகளை குறைக்கும். நீர்க்கட்டி காரணமாக ஏற்படும் தசைப்பிடிப்புகளில் இருந்து நிம்மதி அளிப்பதில் முக்கியப்பங்கை கொண்டுள்ளது. இதில் இருக்கும் வீக்கத்திற்கு எதிராக போராடும் பண்புகள் வலியை குறைக்கும்.
- இன்டோல்- 3 கார்பினால் அதிகமுள்ள உணவுகளான முளைக்கட்டிய தானியங்கள், காலிபிளவர், முட்டைகோஸ், ப்ரோக்கோலி போன்ற உணவுகள் உடலில் அதிகமிருக்கும் ஹார்மோன்களை வெளியேற்றுகிறது. இந்த உணவுகளின் மூலம் ஈஸ்ட்ரோஜன் உடலில் இருந்து விடுவிக்கப்படுகிறது.
- கருப்பை நீர்கட்டிகளால் ஏற்படும் தசைப்பிடிப்புகளை குறைக்க மக்னீசியம் அதிகமுள்ள உணவுகளான வாழைப்பழம், முந்திரி, பாதாம், அவோகேடா, பச்சை காய்கறிகள் உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ளவேண்டும்.
கருப்பையில் நீர்கட்டியால் ஏற்படும் வலியிலிருந்து விடுதலை பெற வேண்டுமா?
Reviewed by Author
on
May 15, 2019
Rating:
No comments:
Post a Comment