துறைநீலாவணை மாணவன் தேசியமட்டத்தில் சாதனை -
பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் தரம் -8 இல் கவிகற்கும் மோ.சப்தசான் எனும் மாணவன் சமூகவிஞ்ஞானப் போட்டியில் தேசியமட்டத்தில் முதலாம் இடம்பெற்று தங்கப்பதக்கம் பெற்று சாதனை நிலை நாட்டியுள்ளதாக அதிபர் ரி.ஈஸ்வரன் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த சமூகவிஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடம்பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ள மாணவனை அதிபர் ஈஸ்வரன்,பிரதி அதிபர் செல்வம் ஆகியோர் பாராட்டியுள்ளதுடன் கிராமமட்டத்தில் உள்ள பொது அமைப்புக்களும் பாராட்டிவருகின்றனர்.
இவர் துறைநீலாவணை 8 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் மோகனசுந்தரம் ஜெயந்தினி தம்பதியினரின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அதேவேளை இவரைக்கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்,பிரதிஅதிபர்கள் அனைவருக்கும் சாதனை நிலைநாட்டிய மாணவனின் தந்தை மோகனசுந்தரம் நன்றி தெரிவித்துள்ளார்.
துறைநீலாவணை மாணவன் தேசியமட்டத்தில் சாதனை -
Reviewed by Author
on
May 03, 2019
Rating:

No comments:
Post a Comment