அண்மைய செய்திகள்

recent
-

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இலங்கையின் தாக்குதலுக்காக கிடைத்த பெருந்தொகை நன்கொடை எவ்வளவு தெரியுமா? - T


இலங்கையில் தாக்குதலை முன்னெடுக்கும் முன்னர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு பெருந்தொகைப்பணம் கொடையாக கிடைத்ததாக இஸ்ரேலின் உளவுச்சேவை தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் சர்வதேச எல்லையோர மேற்கு கரீபியன் தீவான கைமேன் தீவு மற்றும் கனடாவுக்கு வெளியே இயங்கிவரும் 'கொய்ன்பேமென்ட்ஸ்' நிறுவனத்தின் ஊடாகவே இந்த நன்கொடை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

புலனாய்வுத் தகவல்களின்படி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு முதல்நாள், 'கொய்ன்பேமென்ட்ஸின்' நிதிக்கையிருப்பு, 5இலட்சத்தில் இருந்து 4.5 மில்லியன்களாக உயர்ந்திருந்தது.
எனினும், இலங்கையில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட அடுத்த நாள் அந்த தொகை மீண்டும் 5 இலட்சமாக குறைந்துள்ளதாக இஸ்ரேலின் உளவுசேவை கண்டறிந்துள்ளது. இந்த தகவல்களை இஸ்ரேலின் செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இலங்கையின் தாக்குதலுக்காக கிடைத்த பெருந்தொகை நன்கொடை எவ்வளவு தெரியுமா? - T Reviewed by Author on May 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.